உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.;

Update: 2025-08-08 14:28 GMT
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு. கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற்றது. இந்த முகாமில் பயனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்து முறையாக தீர்வு காணப்படுகிறதா என்பது குறித்து ஆட்சியர் தங்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகாமிற்கு வந்த பயனாளிகளிடம் எந்த திட்டத்திற்காக மனு அளிக்க வந்தீர்கள் என விசாரித்தார். மேலும் அதிகாரிகளிடம் , பயனாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பயனாளிகளின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும். ஆவணங்களை கொண்டு வர தவறி இருந்தாலும் அது குறித்து விளக்கமாக தெளிவாக எடுத்துக்கூறி ஆவணங்களை சமர்ப்பிக்க பயனாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். கொடுத்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முகாமில் திடீரென மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வந்ததால் அதிகாரிகள் அச்சமடைந்தனர்.

Similar News