ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்;

Update: 2025-08-09 09:17 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சி உள்ளது. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து நீர் வீழ்ச்சியில் குளிப்பதும், லிங்க வடிவிலான வெற்றிவேல் முருகன் கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்து செல்வது வழக்கம் கடந்த ஒரு மாதமாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதநால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்ததையொட்டி நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் இன்று சுற்றுலா வந்த பயணிகள் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆனந்தத்துடன் குளித்து மகிழ்ந்தனர். நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், வனப்பகுதிக்கு செல்ல அனுமதியில்லை. அதேபோல் பாறைகளில் ஏறக்கூடாது. மீறினால் வனச்சட்டப்படி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News