நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
மதுரை அலங்காநல்லூர் பகுதிகளில் அமைச்சர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அலங்காநல்லூர் , குறவன்குளம் மற்றும் வலசை கிராமங்களில் நேற்று (ஆக.9) இரவு பொதுமக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கினார். உடன் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் ,திமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.