வாட்ச்மேனிடம் பணம் வழிப்பறி
மதுரை வாடிப்பட்டி அருகே வாட்ச்மேனிடம் பணத்தை வழிப்பறி செய்த நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.;
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டு நீரேத்தான் பகுதியை சேர்ந்த செல்வம் (61) என்பவர் ஆண்டிபட்டி பங்களா ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடையில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் (ஆக.8) இரவு 11 மணிக்கு முகத்தில் துணி கட்டி இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர்கள் செல்வத்தை எழுப்பி பேச்சு கொடுத்துள்ளனர். பின் ஆயுதங்களை காட்டி மிரட்டி சம்பள பணம் ரூ.7,150ஐ பறித்து தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.