அம்மனுக்கு சேகரிச்சி கஞ்சி படையலிட்டு சிறப்பு வழிபாடு.
நல்ல மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் , மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் 2025 ஆகஸ்ட் 10 இன்று அம்மன் பக்தர்கள் செங்குணம் மாரியம்மன் ஆலய வளாகத்தில் சேகரிச்சி கஞ்சி தயாரித்து அம்மனுக்கு படையலிட்டு வணங்கி மகிழ்ந்தனர்;
பெரம்பலூர் அருகே செங்குணம் அண்ணா நகர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு சேகரிச்சி கஞ்சி படையலிட்டு சிறப்பு வழிபாடு . பெரம்பலூர் வட்டம் செங்குணம் அண்ணா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அண்ணா நகர் பகுதி அம்மன் பக்தர்கள் பலரும் திருச்சி - அருள்மிகு சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து கடந்த சில நாட்களாகவே விரதம் இருந்து வருகின்றனர். நல்ல மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் , மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் 2025 ஆகஸ்ட் 10 இன்று அம்மன் பக்தர்கள் செங்குணம் மாரியம்மன் ஆலய வளாகத்தில் சேகரிச்சி கஞ்சி தயாரித்து அம்மனுக்கு படையலிட்டு வணங்கி மகிழ்ந்தனர் பொதுமக்களுக்கு கஞ்சி ஊற்றினர் இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.