முனீஸ்வரர் கோவிலில் அன்னதானம்.
மதுரை விமான நிலைய வளாகத்தில் முனீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது .;
மதுரை சர்வதேச விமான நிலைய வளாக பகுதியில் அருள்மிகு பொன் மகாமுனிஸ்வரர் திருக்கோவில் உள்ளது திருக்கோவிலில் 22வது ஆண்டு ஆடி மாத பொங்கல் விழா நடைபெற்றது.இதனை முன்னிட்டு பொன் மகா முனீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஆக.10) காலை 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கறிவிருந்து அளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை விமான நிலைய பொன் மகா முனிஸ்வரர் திருக்கோயில் நிர்வாகி ஏர்போர்ட் மூர்த்தி செய்திருந்தார்.