மூதாட்டி காதில் இருந்த நகை அபேஸ்

அபேஸ்;

Update: 2025-08-11 03:35 GMT
அரகண்டநல்லுார் அடுத்த டி.தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னம்மாள், 80; நேற்று காலை 5:30 மணிக்கு, அக்கிராமத்தின் ஒதுக்குபுறமாக உள்ள இடத்தில் வீசப்பட்டுள்ள காலியான பிராந்தி பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்களை பொறுக்கி கொண்டிருந்தார். அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர், மூதாட்டி சென்னம்மாளிடம் பேச்சு கொடுத்தார்.உள்ள இடத்தில் நிறைய பாட்டில்கள் கிடக்கிறது, என்னுடன் வா என கூறி மூதாட்டியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு, மூதாட்டியின் காதில் அணிந்திருந்த தலா 3 கிராம் கொண்ட 2 கம்மலை அறுத்துக் கொண்டு, மூதாட்டி வைத்திருந்த 4500 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடினார். மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். காதில் ரத்தம் சொட்டிய நிலையில் இருந்த மூதாட்டியை திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். ஒரு கம்மல் சம்பவ இடத்தில் மீட்கப்பட்டது. இது குறித்து அவரது மகன் பாஸ்கரன், 62; கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Similar News