அடையாள அட்டை வழங்கல்

வழங்கல்;

Update: 2025-08-11 03:59 GMT
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் விக்னேஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் செல்வி பிரியா, மனநல டாக்டர் சரஸ்வதி, கண் டாக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 58 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 54 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. அத்துடன் உதவி உபகரணங்கள் மற்றும் செயற்கை கை, கால் வேண்டி விண்ணப்பித்திருந்த 36 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அளவிடும் பணி நடந்தது.

Similar News