விடுதி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் விடுதி உரிமையாளா் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.;
தூத்துக்குடியில் தனியார் விடுதி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் துப்புரவு பணியாளர் பார்வதி ஆகியோரை பார்வதியின் மகன் மற்றும் மற்றொரு வாலிபர் சேர்ந்து விடுதிக்குள் புகுந்து அறிவாளால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பு பலத்த வெட்டு காயங்களுடன் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி வடபாகம் காவல்துறையினர் விசாரணை தூத்துக்குடி போல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவரருக்கு சொந்தமாக எட்டையாபுரம் ரோட்டில் தனியார் விடுதி அமைந்துள்ளது இதில் துப்புரவு பணியாளராக தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த பார்வதி என்பவர் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் பார்வதியின் மகன் செல்வம் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் இன்று சுமார் 4 மணி அளவில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் விடுதிக்குள் உள்ளே புகுந்து அங்கு சோபாவில் அமர்ந்திருந்த விடுதி உரிமையாளர் முருகானந்தத்தை வெட்ட துவங்கினர் இதைத் தொடர்ந்து அதிர்ச்சியில் முருகானந்தம் அலற அருகே இருந்த துப்புரவு பணியாளர் பார்வதி உடனடியாக விடுதி உரிமையாளரை காப்பாற்றுவதற்காக தடுக்க துவங்கினார் இதில் பார்வதிக்கும் அருவாள் வெட்டு விழுந்தது இதைத்தொடர்ந்து இரண்டு பேரும் தப்பி ஓடி விட்டனர் இதையடுத்து ரத்த வெள்த்தில் இருந்த விடுதி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் துப்புரவு பணியாளர் பார்வதி ஆகியோரை விடுதி ஊழியர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தாக்குதலில் ஈடுபட்டு தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர் மேலும் விடுதி உரிமையாளரை இருவரும் எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடியில் விடுதிகள் புகுந்து விடுதி உரிமையாளர் மற்றும் துப்புரவு பணியாளர் அறிவாளால் வெட்டி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.