மதுரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் இன்று போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.;

Update: 2025-08-11 05:35 GMT
மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தை சுற்றி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சர்வீஸ் கடைகள் உள்ளன இது குளத்தின் கரையை மறைத்து நடுவே உள்ள கலைநயம் மிக்க நீராழி மண்டபத்தின் தோற்றம் வெளியே தெரிவதில்லை மேலும் கடைகளில் கழிவு நீர் குப்பை சேருமிடமாக தெப்பக்குளம் மாறிவிட்டதால் இக்கடைகளை காலி செய்ய உரிமையாளருக்கு சில ஆண்டுகளுக்கு முன் கோவில் நிர்வாகம் நோட்டீஸ் செலுத்தின நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு வியாபார சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். மேல்முறையீடு அனைத்தும் தள்ளுபடியான நிலையில் கடந்த ஆண்டு ஜூலையில் உயர்நீதிமன்றம் காலி செய்ய அவகாசம் கொடுத்த நிலையில் உச்சி நீதிமன்றத்தை நாடினார்கள். இது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 86 கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை மூன்று ஜேசிபிகளை கொண்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் விதிக்கப்பட்டன. இதனால் இப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நகர் காவல் உதவி ஆணையர் கணேசன் தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News