கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர காவல் நிலையம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற போதை இல்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியை திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் இருந்து காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், நகர காவல் ஆய்வாளர் வளர்மதி தொடங்கி வைத்தனர்.பேரணி திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்