பொன்னா கவுண்டனூர்,-சரக்கு லாரியை வேகமாக இயக்கியதால் சாலை ஓர பலத்தில் மோதி விபத்து.
பொன்னா கவுண்டனூர்,-சரக்கு லாரியை வேகமாக இயக்கியதால் சாலை ஓர பலத்தில் மோதி விபத்து.;
பொன்னா கவுண்டனூர்,-சரக்கு லாரியை வேகமாக இயக்கியதால் சாலை ஓர பலத்தில் மோதி விபத்து. நாமக்கல் மாவட்டம் , பரமத்தி வேலூர் , வடுகபாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக வடிவேலன் வயது 50. இவர் ஆகஸ்ட் 9-ம் தேதி நள்ளிரவு 1:15 மணி அளவில் மதுரை - கரூர் சாலையில் அவரது சரக்கு லாரியை ஓட்டிச் சென்றார். அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட பொன்னா கவுண்டனூர் பகுதியில் வந்த போது லாரியை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சண்முக வடிவேலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பத்மா அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் சண்முக வடிவேலன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.