கரூர்-போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு.

கரூர்-போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு.;

Update: 2025-08-11 10:50 GMT
கரூர்-போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு. போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் தாந்தோணி மலை அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ சிவகாமசுந்தரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கல்லூரி மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

Similar News