மலையம்பாளையம்-டூவீலர் மீது ஈச்சர் வேன் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

மலையம்பாளையம்-டூவீலர் மீது ஈச்சர் வேன் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.;

Update: 2025-08-11 11:29 GMT
மலையம்பாளையம்-டூவீலர் மீது ஈச்சர் வேன் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். நாமக்கல் மாவட்டம் , பரமத்தி வேலூர்,தெங்கு பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன் வயது 49. இவர் ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 7 40 மணியளவில் கரூர் - சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் மலையம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது , அதே சாலையில் சேலம் மாவட்டம் , வாழப்பாடி,நாடார் தெருவை சேர்ந்த மோகன் வயது 50 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஈச்சர் வேன் மேகநாதன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மேகநாதனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் மேகநாதன் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஈச்சர் வேனை வேகமாகவும் அஜாக்கிரதயாகவும்ம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மோகன் மீது வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News