வாணியம்பாடியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்..
வாணியம்பாடியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்..;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல். தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பிரபு தலைமையில் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கைது. கைது செய்யப்பட்டு பின்னர் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் இதனால் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.