போதை பொருட்கள் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
போதை பொருட்கள் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது;
திருப்பத்தூர் மாவட்டம் போதை பொருட்கள் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழாவினைகாணொளிக்காட்சியின் வாயிலாக இன்றுதொடங்கி வைத்தார்கள். இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் போதைப்பொருள் மற்றும் தடுப்புக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் எடுத்துக் கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கரியம்பட்டி அரசு கலை கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும், போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன். பின்னர் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறித்து "போதை அழிவின் பாதை" "போதை பொருட்கள் சமூகத்தின் அழிவின் காரணி" "போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம்"என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்தினர். மேலும், 1.அரசு உயர்நிலைப்பள்ளி சந்தராபுரம் (முதல் பரிசு 15,000) 2.அரசு உயர்நிலைப்பள்ளி கோணப்பட்டு (இரண்டாம் பரிசு 10,000) 3.ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி வடப்பட்டு (மூன்றாம் பரிசு -5,000 பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது