புள்ளிமான் உயிரிழப்பு

உயிரிழப்பு;

Update: 2025-08-12 03:57 GMT
சின்னசேலம் அடுத்த கூகையூர் பகுதியில் சாலையோரம் நேற்று காலை ஒன்றரை வயதுடைய பெண் புள்ளி மான் வ னப்பகுதியில் இருந்து வெளியே வந்தபோது, நாய் கடித்ததால் காயமடைந்து நடக்க முடியாமல் படுத்திருந்தது.தகவலறிந்த வி.கிருஷ்ணாபுரம் வனவர் வினோத், வனக்காப்பாளர் வீரராகவன் ஆகியோர் காயமடைந்த மானை மீட்டு சிகிச்சைக்காக குரால் கிராம கால்நடை மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மானை மீண்டும் வனப்பகுதியில் விடுவதற்காக துாக்கி சென்றனர். அப்போது மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து குரால் வனப்பகுதியில் புள்ளிமான் புதைக்கப்பட்டது.

Similar News