கள்ளக்குறிச்சியில் உறுதிமொழி ஏற்பு

ஏற்பு;

Update: 2025-08-12 04:01 GMT
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.சென்னையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த 'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். எனது குடும்பத்தினர், நண்பர்களை போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுத்து அறிவுரை வழங்குவேன் உள்ளிட்ட கருத்துக்களை கொண்ட உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.

Similar News