கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆய்வு செய்த செந்தில் பாலாஜி.
கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆய்வு செய்த செந்தில் பாலாஜி.;
கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆய்வு செய்த செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கரூர் மாநகராட்சியின் 22 , 23 வார்டுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திட்டத்தில் மனு அளிக்க வந்த பயனாளிகளிடம் அவரது மனுக்கள் விவரம் குறித்து கேட்டறிந்து அது குறித்த குறிப்புகளை அதிகரிகளிடம் தெரிவித்து மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் , கட்சி நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.