திருமங்கலத்தில்' தாயுமானவர்" திட்டம் தொடக்கம்
மதுரை திருமங்கலம் அருகே "தாயுமானவர்" திட்டத்தை மாவட்ட செயலாளர் இன்று தொடங்கி வைத்தார்.;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தாயுமானவர் திட்டத்தை இன்று (ஆக.12) காலை காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். அதனடிப்படையில் இன்று (ஆக.12) திருமங்கலம் தொகுதியில் கிழக்கு ஒன்றியம் சாத்தங்குடியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தொடங்கி வைத்தார்.அரசு அலுவலர்கள் மற்றும் திமுகவினருடன் இணைந்து, வீடு தோறும் சென்று ரேஷன் பொருட்களை நேரடியாக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் வழங்கினார் .