"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்த எம் எல் ஏ
மதுரை சோழவந்தான் பகுதியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வாவிட மருதூர் மந்தை திடலில் இன்று (ஆக.12) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை 15B மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, பண்ணைகுடி மற்றும் வாவிடமருதூர் ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெங்கடேசன் எம்எல்ஏ துவக்கி வைத்து, துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு பெறப்பட்ட மனுவுக்கு உடனடி தீர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.