குமரி மாவட்ட கடலோர மக்கள் சங்கம் சார்பில் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாலையில் சின்னத்துறை சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கடலோர மக்கள் சங்க மேனாள் தலைவர் ஒலிவர்ஜாய் தலைமை உரையாற்றினார். ஐஆர்இஎல் எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் அருளானந்தன், கடலோர மக்கள் சங்க செயற்குழு உறுப்பினர் றேச்சல் மேரி, கடலோர மக்கள் சங்க செயலாளர் ஆகிமோன், மரியதாசன் ஆகியோர் விழிப்புணர்வு உரைகள் வழங்கினர். எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான குறும்பனை பெர்லின் சிறப்புரையாற்றினார். கடலோர மக்கள் சங்க செயலாளர் இரையுமன் சாகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.