திருச்செங்கோட்டில் முதல்வர் அவர்களின் தாயுமானவர் திட்டம் துவக்கம்

திருச்செங்கோட்டில் முதல்வர் அவர்களின் தாயுமானவர் திட்டம் துவக்கம்;

Update: 2025-08-13 08:42 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை வீடு தேடி சென்றடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்.இதன் அடுத்த கட்டமாக சிறப்பு கவனம்பெறவேண்டிய வயது முதிர்ந்தோர் மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு வயதான காலத்தில் மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள் நியாய விலைகடைகளைத் தேடிச் சென்று ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டதை உணர்ந்து வீடு வீடாக சென்று அவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கும் விதமாகமுதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தாயுமானவர் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது அதன்படி திருச்செங்கோடு நகராட்சி 15 வது வார்டு பகுதியில் உள்ள அண்ணா நகர்நாகர்பள்ளம் நியாய விலை கடையை சேர்ந்த 7 மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 71குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று சர்க்கரை அரிசி பாமாயில் கோதுமை பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சி என்பது கூட்டுறவுத் துறை இளநிலை உதவியாளர்ஜெயவேல் நியாய விலைக் கடை பணியாளர் ஜனார்த்தனன் ஆகியோர் உடன் இருந்தனர்.மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது முதிர்ந்தோருக்கும் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்ட எங்களுக்கு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பொதுமக்கள் கூறினர்.

Similar News