கால்வாயில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு!
கால்வாயில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.;
வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியில், 7 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. பசுமாட்டை கண்ட பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கால்வாய் சகதிக்குள் இறங்கி மாட்டை கயிறு கட்டி போராடி பத்திரமாக மீட்டனர்.