சேறும் சகதியுமாக மாறிய நேதாஜி மார்க்கெட்!
சேறும் சகதியுமாக மாறிய நேதாஜி மார்க்கெட்டை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
வேலூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் நேதாஜி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு, காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகை பொருட்கள் கடைகள் உள்ளன. இந்நிலையில், வேலூரில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக, மார்க்கெட் பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக மாறிவிட்டது. பொதுமக்கள் வழுக்கி விழுந்து செல்கின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.