கவின் கொலை வழக்கில் சுகாசினி அவரது தாயாரிடம் சிபிசிஐடி விசாரணை

தூத்துக்குடி கவின் ஆணவ படுகொலை தொடர்பாக சி பி சி ஐ டி காவல்துறையினர் தூத்துக்குடி சி பி சி ஐ டி அலுவலகத்தில் வைத்து நேற்று கவினின் காதலியான சுபாஷினி மற்றும் காவல் உதவி ஆய்வாளரும் சுபாசினியின் தாயாருமான கிருஷ்ணவேணி ஆகிய இருவரிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்.;

Update: 2025-08-13 10:06 GMT
தூத்துக்குடி கவின் ஆணவ படுகொலை தொடர்பாக சி பி சி ஐ டி காவல்துறையினர் தூத்துக்குடி சி பி சி ஐ டி அலுவலகத்தில் வைத்து நேற்று கவினின் காதலியான சுபாஷினி மற்றும் காவல் உதவி ஆய்வாளரும் சுபாசினியின் தாயாருமான கிருஷ்ணவேணி ஆகிய இருவரிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளனர் இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கவின் கடந்த 27 ஆம் தேதி நெல்லையில் வைத்து ஆணவ படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ஆணவ படுகொலை தொடர்பாக படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இந்த ஆணவ படுகொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த ஆணவ படுகொலை தொடர்பாக நெல்லை சிபிசிஐடி காவல்துறையினர் சிறையில் இருந்து சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரை நீதிமன்ற அனுமதி பெற்று இரண்டு நாட்களாக சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி சி பி சி ஐ டி அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி காவல் துறையினர் கவின் ஆணவ படுகொலை தொடர்பாக நெல்லையிலிருந்து கவினின் காதலியான சுபாஷினி மற்றும் சுபாசினியின் தாயும் உதவி ஆய்வாளரான கிருஷ்ணவேணி ஆகியோரிடம் தனி தனியாக தூத்துக்குடி சி பி சி ஐ டி அலுவலகத்திற்கு கூட்டி வந்து சிபிசிஐடி டிஎஸ்பி அருணாச்சலம் தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி உள்ளனர் இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

Similar News