கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா

கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா;

Update: 2025-08-13 11:13 GMT
கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வு கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் துணைத்தாளாளர் திரு.ஆர் சச்சின் அவர்கள் வாழ்த்துகளோடு தொடங்கியது. இந்நிகழ்வில் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் வரவேற்புரை வழங்கினார். கே.எஸ்.ஆர் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. வி. மோகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக திருமதி அனுராதா திருமலை, மனிதவள மேம்பாட்டு அதிகாரி  அவர்கள் கலந்துகொண்டு நாம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும், கல்வி நிறுவனம் என்பது ஒரு கடல், நாம் சரியாக பயன்படுத்தினால் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியும். வெற்றியின் இரகசியம்: நம்பிக்கை, முயற்சி, தோல்விகளைத் தாங்கும் மனப்பாங்கு மற்றும் கடின உழைப்பு. மேலும் உண்மையான உழைப்பும் மனவுறுதியும் தான் எதிர்காலத்தை உருவாக்கும், மாணவிகள் வரும் காலங்களில் எவ்வாறு வேலை வாய்ப்பினை பெறுவது என்பது பற்றியும், அவற்றிற்கான வழிமுறைகளையும் எடுத்துத்துரைத்தார். மாணவப் பிரதிநிதி, உறுப்பினர்கள் மற்றும் மன்றத் தொடக்க விழாவில் மாணவத்தலைவர் துணைத் தலைவர்களை கௌரவித்தும், சிறு குறு தொழில் முனைவோர் பயிற்சி பட்டறையில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு தனித் திறன் மேம்பாட்டு அலுவலர், முனைவர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் கோபிநாத் சுப்பிரமணியன், துணைமுதல்வர், இயக்குநர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இந்நிகழ்வின் இறுதியாக ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறைத்தலைவர் ர.பூவிழிசெல்வி நன்றியுரை வழங்கினார்.

Similar News