டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
வேலூரில் டாஸ்மாக் கடைகளுக்கு ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தினை ஒட்டி அனைத்து மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.