சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்!
சாலையில் மழை நீர் தேங்கி நின்றதால் சாலை சேரும் சகதியுமாக உள்ளது.;
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதன்படி செவ்வூர் பகுதிகளில் பெய்த மழையால் ஆங்காங்கு சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், அப்பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கி நின்றதால் சாலை சேரும் சகதியுமாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.