கோவில் கொடை விழா: அக்னி சட்டி பால்குடம் ஊர்வலம்!

முத்து மாரியம்மன் கோவில் கொடை விழா: அக்னி சட்டி பால்குடம் ஊர்வலம்!;

Update: 2025-08-14 02:40 GMT
தூத்துக்குடி மில்லர்புரம் முத்து மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அக்னி சட்டி, பால்குடம் ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் கோவில் கொடை விழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. விழாவில் தினசரி அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார தீபாரணைஞ நடந்து வருகிறது. இன்று ஐந்தாவது நாள் திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி, பால்குடம் ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கி அம்மன் கோவில் முன்பு இருந்து 51 மற்றும் 31அக்னி சட்டி மற்றும் 51 பால்குடம் எடுத்து சக்தி கும்பத்துடன் பிரதான சாலை வழியாக சென்று கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் உள்பட 21 அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாரனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Similar News