புலிவலத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்த நபர் படுகாயம்!

விபத்து செய்திகள்;

Update: 2025-08-14 05:45 GMT
புதுக்கோட்டை மாவட்டம் புலிவலத்திலிருந்து ஆலங்குடிக்கு பைக்கில் சுப்பிரமணியன் (62), ஆறுமுகம் (64) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது புலிவலம் சர்ச் அருகே உள்ள சாலையில் சுப்பிரமணியன் நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இது குறித்து நம சமுத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News