புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு விக்னேஷ் (33) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஆதனக்கோட்டை பிடாரி அம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.