ஏமூர் பாலத்தில் டூவீலரை வேகமாக இயக்கியதால் சுவற்றில் மோதி வாலிபர் உயிரிழப்பு.
ஏமூர் பாலத்தில் டூவீலரை வேகமாக இயக்கியதால் சுவற்றில் மோதி வாலிபர் உயிரிழப்பு.;
ஏமூர் பாலத்தில் டூவீலரை வேகமாக இயக்கியதால் சுவற்றில் மோதி வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , குளித்தலை அருகே நச்சலூர் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் வயது 34. இவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் ஏமூர் பாலம் அருகே வந்தபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவற்றில் மோதி படுகாயம் ஏற்பட்டு மயக்கம் ஆகி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த அரவிந்தனின் மனைவி குணசுந்தரி வயது 31 என்பவர் அளித்த புகாரில் வெள்ளியணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.