முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பாக முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் பரிசளிப்பு விழா
பரிசளிப்பு விழா;
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனியில் முன்னாள் ராணுவ வீரர்கள் தேசிய ஒருங்கிணைப்பு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பாக முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா தென் மண்டல தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது மாநிலத் தலைவர் கே. சீனிவாசன் மாவட்டத் தலைவர் எஸ் மணி மற்றும் மாவட்ட பொருளாளர் ஐயப்பன் சிறப்பு விருந்தினராக பி.பாண்டிய ராஜன் தேனி மாவட்ட தொழில் அதிபர் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் ராணுவத்தில் நல சங்கத்திற்கு கே ராஜய்யா .உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செயல்படுகிறார். மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் ராணுவத்தினர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் விழாவில் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு பத்து நபர்களுக்கு பணம் முடிப்பும் கேடயம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கூட்டத்தில் போரில் வீர மரணம் அடைந்தராணுவத்தினர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர் மேலும் தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு பல்பொருள் அங்காடி ஆன கேண்டீன் தனியார் இடத்தில் வாடகைக்கு செயல் பட்டு வருகிறது அந்த வாடகை கட்டடத்திற்கு சிறப்பு விழாவிற்கு 15 லட்ச ரூபாய் திறப்பு விழா செலவு மட்டும் செய்துள்ளார்கள் ஏன் ராணுவ வீரர்களுக்கான இடம் இருக்கும் பொழுது எதற்கு தனியார் இடத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது தேனி மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு என்று மருத்துவமனை இயங்கி வருகிறது முன்னாள் ராணுவத்தினருக்குஒதுக்கப்பட்ட இடம் 50 சென்ட் அதில் 25 சென்ட் இல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆகவே மீதமுள்ள 25 சென்டில் எங்களுக்கு கேண்டினும் அமைத்து தர வேண்டுமென தேனி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 17 ஆண்டுகளாக போராடி வருகின்றனர் இதில் குறிப்பாக மாவட்ட ஆட்சியிடம் பலமுறை மனு செய்துள்ளனர் ஆகவே முன்னாள் ராணுவத்தினர் குடும்ப நலன் கருதி முன்னாள் ராணுவத்தினருக்கு என்று இயங்கி வரும் மருத்துவமனை அருகில் கேண்டின் அமைத்துக் கொடுத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என இந்த இரண்டு கோரிக்கைகளும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இவ் விழாவில் முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்