கருப்புக் கொடி ஏந்தி கிராம சபை கூட்டத்திற்கு வந்த எஸ் டி பி ஐ கட்சியினர்

கருப்புக் கொடி ஏந்தி கிராம சபை கூட்டத்திற்கு வந்த எஸ் டி பி ஐ கட்சியினர்;

Update: 2025-08-16 03:55 GMT
கரூர்- அரவக்குறிச்சி அருகே தாலுக்கா லிங்கமநாயக்கன்பட்டி கிராம சபை கூட்டத்தில் கருப்புக் கொடி ஏந்தி கையில் கோரிக்கை வாசகத்தோடு எஸ்டிபிஐ கட்சியினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது சமூக நீதிப் பேசும் முதல்வர் லிங்கம் நாயக்கம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரசூல் நகர் ஜாமியா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்த பகுதி புறக்கணிக்கப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினர் சென்னையில் போராடிவரும் துப்புரவு பணியாளர்கள் நிரந்தர பணியாளராக அமர்த்திட வேண்டும் பஞ்சாயத்து துப்புரவு பணி ஊழியர்களுக்கு ஊதியம் 5,000ல் இருந்து 15,000 ஆக உயர்த்திடவும் கிராம பஞ்சாயத்து கூட்டங்களை கண்துடைப்பாக நடத்துவதை கைவிடு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கருப்பு கொடியுடன் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர் எஸ்டிபிஐ கட்சியினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் எஸ் டி பி ஐ கட்சியினர் கலைந்து சென்றனர்.

Similar News