கோவை: நோயிலிருந்து விடுதலை –வருமுன் காக்கும் மருத்துவ மையம் துவக்கம் !

இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் அரசூரில் வருமுன் காக்கும் மருத்துவ மையம் மற்றும் Indo States Health App செயலியை அறிமுகப்படுத்தியது.;

Update: 2025-08-16 07:07 GMT
மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் அரசூரில் தனது வருமுன் காக்கும் மருத்துவ மையத்தையும் புதிய Indo States Health App செயலியையும் துவக்கியுள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த AI செயலி, மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனை முடிவுகள், நேரம் பதிவு, நினைவூட்டல்கள் ஆகிய அனைத்தையும் ஒரே தளத்தில் வழங்குகிறது. 128-slice CT, 1.5 Tesla MRI, 3D மேமோகிராஃபி, DEXA ஸ்கேன் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப பரிசோதனைகள், இதய நோய், புற்றுநோய், எலும்புத் தளர்ச்சி, மனநலம் ஆகியவற்றுக்கான முழுமையான சோதனைகள் மற்றும் ஆலோசனைகள் இம்மையத்தில் கிடைக்கும். நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி உரையாற்றியபோது, விழிப்புணர்வு, தொழில்நுட்பம் மற்றும் முன்கூட்டியே நோய் கண்டறிதலே ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழி என்றார். துவக்க விழாவில் சாதனை பெண்மணி திருமதி கமலாத்தாள், திருமதி விஜயலட்சுமி, நிறுவனர்கள் டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி, டாக்டர் நித்யா மோகன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு. கோவிந்தராஜ், டாக்டர் வாணி மோகன், டாக்டர் மோகன், டாக்டர் லோகேஷ், மேலாளர் திரு. அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News