எரியில் ஒப்பந்தத்தை மீறி அதிக அளவு மண் எடுத்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு
எரியில் ஒப்பந்தத்தை மீறி அதிக அளவு மண் எடுத்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு;
திருச்செங்கோடு தாலுக்கா திருச்செங்கோடு ஒன்றியம் சங்ககிரி ரோட்டில் உள்ள நாராயண பாளையம் பகுதியில் 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாராயணன் பாளையம் ஏரி உள்ளது. சங்ககிரி திருச்செங்கோடு பரமத்தி SH 86 என்றமாநில நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகிறது இதற்காக இந்த ஏரியிலிருந்துதினமும் ஒரு லோடு வீதம் காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் எந்த சாலைகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தாமல் 75 மீட்டர் நீளம் 75 மீட்டர் அகலம் 0.9மீட்டர் ஆழத்தில் 5000 கியூபிக் மீட்டர் அல்லது பத்தாயிரம் மெட்ரிக் டன் மண் அள்ளிக் கொள்ள அரசு விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவரின் பிரம்மானந்த சொரூபாஎன்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மண் அள்ளுவதாக கிராம மக்களிடம் கூறிய நிறுவனத்தினர் ஒப்பந்த அளவை மீறி 7 அடி உயரத்திற்கு மண் அள்ளி உள்ளனர் ஒரு பர்மிட் வைத்துக் கொண்டு 10 டிப்பர் லாரிகள் மண் அள்ளியதாக கூறி நேற்று லாரிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய ஊர் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.தொடர் விடுமுறை காரணமாக திங்கட்கிழமை வந்து அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை மீண்டும் டிப்பர் லாரிகளில் இரண்டு ஜேசிபிகளை கொண்டுமண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஏரிக்கரையில் திரண்ட பொதுமக்கள் வாகனங்களை சிறை பிடித்தனர். மேலும் அதிகாரிகள் வந்து தொடர்ந்து பார்த்து தடுத்து நிறுத்தா விட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியஊர் பொதுமக்களில் ஒருவரான ஜெயக்குமார் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள்நெடுஞ்சாலைத்துறை சிவில் இன்ஜினியர் மணி ஆகியோர் கூறியதாவது சாலை விரிவாக்க பணிக்காக மண் அள்ளிக் கொள்கிறோம் என மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு ஆணைகளை காட்டி மண் எடுக்க வந்தஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தில் உள்ள அளவை தாண்டி மண் அள்ளுவது தெரிய வந்தவுடன்நேற்று தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினோம். மேலும் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்தோம். தொடர் விடுமுறை நாட்களாக இருப்பதால் திங்கட்கிழமை வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியிருந்த நிலையில் இன்று மீண்டும் மண் எடுக்க வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி பிடித்து வைத்துள்ளோம். ஒப்பந்தத்தில் உள்ளபடி இல்லாமல் நெடுஞ்சாலையில் இவர்கள் வாகனம் செல்ல வசதியாக தடுப்புச் சுவரை இடித்து அகற்றி ரோட்டை சேதப்படுத்தி உள்ளனர். 75 மீட்டர் நீளம் 75 மீட்டர் அகலம் சுமார் 3 அடி உயரம் மட்டுமே மண் எடுக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறியிருந்தும் 7 அடி உயரத்திற்கு மண் அள்ளி உள்ளனர். இன்னும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி இருக்காவிட்டால் எங்கள் ஏரியே காணாமல் போய் இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக வந்து அளவு செய்து மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மேற்கொண்டு மண் அள்ள அனுமதிக்க கூடாது. மீறி அனுமதித்தாலோ அல்லது எங்களுக்கு தெரியாமல் மண்ணை அள்ள முயற்சித்தாலோ போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.ஏரி பகுதியில் ஆண்கள் பெண்கள் என நாராயண பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார்50 பேர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.