பாகலூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்.
பாகலூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் நேற்று ஸ்ரீ கிருஷ்ணன் ஜென்மாஷ்டமியை ஒட்டி அங்குள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து பாகலூர் பகுதியில் ஊர்வலமாக சென்று வேணு கோபால சாமி கோவிலுக்கு வந்தனர். இந்த நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான குழந்தைகள், பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.