மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி தொடக்க விழா
திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பள்ளி மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி;
திருத்துறைப்பூண்டியில் உள்ள புனித தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு முதல் மாணவ மாணவிகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி வழங்கப்படுகிறது.இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது பயிற்சியை பள்ளியில் தலைமை ஆசிரியை அந்தோணி ஜாஸ்மின் தொடங்கி வைத்தார்.ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாரதி,அனுஷா ஆகியோர் மாணவிகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தனர் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.