தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான்
மதுரை திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா நடைபெற்றது;
மதுரை திருப்பரங்குன்றம் அருள் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் நேற்று (ஆக.16) மாலை ஆடி கிருத்திகையை முன்னிட்டு தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த பின்னர் வீதியுலா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.