திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய மேலச்செவல் இசக்கி பாண்டியனுக்கு இன்று (ஆகஸ்ட் 17) மாநில வர்த்தக அணி செயலாளர் பதவி வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வெளியிட்டுள்ளார்.