வாகன விபத்தில் ஒருவர் பலி.
மதுரை அருகே கார் டூவீலர் மோதியதில் ஒருவர் பலியானார்.;
மதுரை திருப்பரங்குன்றம் வி.ஐ.பி. நகரை சேர்ந்த கருப்பணன் (69) என்பவர் அப்பன்திருப்பதி கோனார் மண்டகப்படி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற வேன் கட்டுப்பாட்டையிழந்து இவர் மீது மோதியதில் சாலையோரம் விழுந்து பலமாக அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அப்பன் திருப்பதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.