திருச்செந்தூரில் உயிருக்கு போராடியவர் மீட்பு
திருச்செந்தூர் கோயில் வளாகப் பகுதியில் உயிருக்கு போராடிய சென்னை மாநகராட்சியில் பணி புரியும் ஓட்டுநரை காப்பாற்றிய திருக்கோவில் காவல் நிலைய காவலர்கள் மற்றும் திருக்கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள்;
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் மாநிலங்களில் இருந்தும் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர் இந்த நிலையில் இன்று இரவு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் நாழிக்கிணறு மேல் புறத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் உடைமாற்ற சென்ற சென்னை ஊரை சேர்ந்த மாநகராட்சியில் பணிபுரியும் ஓட்டுநர் ஜெய்சங்கர் வயது 58 என்பவர் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு சுயநினைவின்றி மயக்க நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ரோந்து பணியில் இருந்த திருக்கோவில் காவல் நிலைய காவலர் முத்துக்குமார் மற்றும் சுபின் ராஜ் ஆகியோர் மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை கண்டு உடனடியாக அங்கிருந்த திருக்கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் விரைந்து சென்ற கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் சிவராஜா, கார்த்திக், சர்வேஸ்வரன், மகாராஜா, மாரிமுத்து, ஆகியோர் உடனடியாக அங்கு சென்று மிகவும் மோசமான நிலையில் கிடந்த அந்த நபரை மீட்டு அங்கிருந்து திருக்கோவில் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவரின் நிலைமையை கண்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மிகச் சரியான நேரத்தில் அந்த நபரை கண்டு உயிர் காப்பாற்றிய காவலர்களுக்கு அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.