போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
பாரதிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்;
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் 60 அடி சாலையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கம் சிஐடியு சார்பில் பணியில் இருப்போரும் ஓய்வு பெற்றோரும் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை உடனே வழங்கு, பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்து, ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்கள் மற்றும் DA உயர்வை முழுமையாக உடவே வழங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.