அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி சீருடை

அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 200 மாணவர்களுக்கு ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியின் தாளாளர் ராம்குமார் சீருடை வழங்கினார்;

Update: 2025-08-18 07:43 GMT
பெரம்பலூர் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 200 மாணவ மாணவியர்களுக்கு ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியின் தாளாளர் ராம்குமார் சொந்த நிதியிலிருந்து பள்ளி சீருடைகள் வழங்கி உதவினார். இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ம.செல்வகுமார். மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) லதா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கினர். மேலும் கொடையாளர் ராம்குமார் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News