தமிழ் சிந்தனை பேரவை சார்பில் தமிழ் சுடர் விருதுகள்
எஸ் எஸ் எம் லட்சுமி அம்மாள் பள்ளியில் தமிழ் சிந்தனைப் பேரவை தமிழ்ச் சுடர் விருதுகள் வழங்கும் விழா.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ் எஸ் எம் லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் கே. பி. இ. ரவீந்திரன் முன்னிலையில் தமிழ் சிந்தனைப் பேரவையின் தமிழ்ச் சுடர் விருதுகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் மூத்த தலைமையாசிரியர் முனைவர் மா. தணிகாசலம் ஐயா அவர்கள் வரவேற்றார். தமிழ் சிந்தனைப் பேரவையின் தலைவர் தமிழறிஞர் ரமேஷ் குமார் அவர்கள் தனித்தமிழை எளிமையாக பேசுவோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி தமிழ்ச் சுடர் விருதுகள் வழங்கினார். பள்ளிபாளையம் சமூக ஆர்வலர் நாகராஜன், இளம்பிள்ளை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஸ்ரீ சௌரிராஜன் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் சிந்தனைப் பேரவை நிர்வாகிகள் மணிகண்டன்,முனைவர் கோவை கவிதா, அங்கப்பன், பூபதி, தனசேகரன், பரமன் பாண்டியன், பழனிவேல், செந்தில்குமார் ஆகியோர் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். நிர்வாகத் தலைமை ஆசிரியர் பார்த்திபன் அவர்கள் நன்றி கூறினார்.