சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு
ரூ.28¾ லட்சம் காணிக்கை வசூல்;
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் நிரந்தரமாக பக்தர்கள் காணிக்கை செலுத்த 10 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஆடிப்பண்டிகையையொட்டி பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக மேலும் 8 உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய மொத்தம் 18 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. காலையில் தொடங்கிய இந்த பணி மாலையில் முடிவடைந்தது. இதில் பக்தர்கள் ரூ.28 லட்சத்து 99 ஆயிரத்து 740 செலுத்தி உள்ளனர். அதே போன்று 83 கிராம் தங்கம், 565 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்டி.என்.சக்திவேல், உதவி ஆணையர் ராஜா, செயல் அலுவலர் அமுதசுரபி, சரக ஆய்வாளர் உமா மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.