முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கிய புகைப்பட கலைஞர்கள்
உலக புகைப்பட கலைஞர் தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கிய பெரம்பலூர் மாவட்ட டிஜிட்டல் போட்டோ மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கத்தினர்.;
உலக புகைப்பட தினம் முன்னிட்டு 19.08.2025 மதிய 1.00 மணி அளவில் ஆத்தூர் சாலையில் உள்ள முது யுகம் முதியோர் இல்லத்தில் பெரம்பலூர் மாவட்ட டிஜிட்டல் போட்டோ மற்றும் ஒளிப்பதிவாளர் தலைமை சங்கத்தின் சார்பில் ஓவியர் ஐயா முகுந்தன் அவர்களின் தலைமையில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட தலைவர் ஜெமினி ஸ்டுடியோ செல்வம், மாவட்ட செயலாளர் சென்னை ஸ்டுடியோ சுப்ரமணியன், மாவட்ட துணைத் தலைவர் கலாம் ஸ்டுடியோ அப்துல்லா, சங்க ஆலோசகர் அருண் வீடியோஸ் அருண், மணி ஸ்டுடியோ மணிகண்டன், தேவா ஸ்டுடியோ, மற்றும் முது யுகம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .