ராமநாதபுரம் புதிய பேருந்து இயக்கம்
இதுவரை பேருந்தே செல்லாத ஊருக்கு அரசு பேருந்து மகளிர் விடியல் பயணம்இயக்கம் தங்கள் ஊரின் வழியாக வந்த பேருந்துக்கு குலவை போட்டு, பேருந்து முன் விழுந்து கும்பிட்டு, பொட்டு வைத்து, மலர் தூவி, மாலை அணிவித்து, சூடம் ஏற்றி பெண்கள் வரவேற்பு;
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில் இந்த கிராமத்திற்கு இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இருந்தது இல்லை. இவர்கள் முதுகுளத்தூர் அல்லது பரமக்குடி செல்ல வேண்டுமெனில் ஊரில் இருந்து 3 கிலோ மீட்டர் நடந்து முதுகுளத்தூர் பரமக்குடி சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தங்கள் ஊருக்கு பேருந்து வேண்டி முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் தங்கள் ஊரின் வழியாக பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் சென்று வர பேருந்து ஏற்பாடு வசதி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். அதன்படி அமைச்சர் கோரிக்கை பரிசீலிக்க பட்டு இன்று முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடி செல்லும் பேருந்து கிருஷ்ணாபுரம் சென்று அதே வழியில் மீண்டும் செல்லும்படி புதிய வழித்தடம் மகளிர் விடியல் பயணம் தொடங்கப்பட்டது. இதனை ஒட்டி கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் நீண்ட காலத்திற்கு பின் வந்த போது விண் அதிர குலவை போட்டு, கைதட்டி வரவேற்று பேருந்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, பேருந்து முன்பு கும்பிட்டு விழுந்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து குலவை போட்டு வரவேற்று அந்த பேருந்தில் குலவை போட்டு பயணம் செய்து மகிழ்ந்தனர். பேருந்து வந்தது முதல் கிளம்பியது வரை பெண்களின் குலவை சத்தம் அப்பகுதியை சந்தோஷ கடலில் ஆழ்த்தியது தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்