பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வசித்து வந்த ஆதரவற்ற நபர் இறப்பு
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வசித்து வந்த ஆதரவற்ற நபர் இறந்தார்.;
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் காலில் புண் இருந்ததால், வலி தாங்க முடியாமல் மயங்கி கிடந்தார். இவரை ஆக.15ல் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவரிடம் குமாரபாளையம் போலீசார் விசாரித்த போது, இவர் பெயர் சரவணன், 58, என்பதும், கோபியை சேர்ந்தவர் என்பதும், பஸ் ஸ்டாண்டில் தங்கி, யாசகம் பெற்று வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. இவர் சிகிச்சை பலனில்லாமல் ஆக. 16 மாலை 02:00 மணியளவில் இறந்தார். இவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் குமாரபாளையம் போலீசில் தொடர்பு கொள்ள வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறது.